பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: அலானா கிங் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

இந்தப் போட்டியில் லெக் ஸ்பின்னர் அலானா கிங் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: அலானா கிங் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா
Published on

வார்னர் பார்க்,

ஆஸ்திரேலிய பெண்கள் அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளேயில் 49/1 என நல்ல தொடக்கம் பெற்றது. ஆனால் பின்னர் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 19 ஓவர்களில் 78/5 என சுருண்டது.

Also Read
’மிடில் ஓவர்களில்.... அதுவே தோல்விக்கு காரணம்’ - கொல்கத்தா கேப்டன் ரஹானே
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: அலானா கிங் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

இதில் ஹென்றி 42 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தாலும், மற்ற வீரர்கள் ஆதரவு அளிக்காததால் அணி 35.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் லெக் ஸ்பின்னர் அலானா கிங் 5 விக்கெட்டுகள் (5/19) எடுத்தார். இது அவரது ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது சிறந்த பந்து வீச்சாகும்.

பின்னர் 137 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி சிறப்பான தொடக்கம் பெற்றது. ஜார்ஜியா வோல் மற்றும் பீபி லிட்ச்பீல்ட் இணைந்து 50 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜார்ஜியா அவுட் ஆனபின், லிட்ச்பீல்ட் (68*) மற்றும் எலிஸ் பெர்ரி (33*) இணைந்து 87 ரன்கள் சேர்த்து, 19.4 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com