3வது ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் (103 ரன்) சதம் அடித்து அசத்தினார்.
Image Courtesy: @TheRealPCB
Image Courtesy: @TheRealPCB
Published on

புலவாயோ,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் (103 ரன்) சதம் அடித்து அசத்தினார். ஜிம்பாப்வே தரப்பில் ராசா, ங்வாரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 304 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஜிம்பாப்வே 40.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப், ஹாரிஸ் ரவுப், ஆமிர் ஜமால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com