3வது ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
Image Courtesy: @TheRealPCB
Image Courtesy: @TheRealPCB
Published on

பார்ல்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பும் பாகிஸ்தான் களம் இறங்கும். அதே வேளையில் ஆறுதல் வெற்றிக்காக தென் ஆப்பிரிக்கா கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com