3-வது ஒருநாள் போட்டி - சதம் விளாசிய ரோகித் சர்மா

3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
3-வது ஒருநாள் போட்டி - சதம் விளாசிய ரோகித் சர்மா
Published on

லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிரான் 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தி உள்ளார்.

கடைசி ஒருநாள் போட்டி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

387 ரன்கள் குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். இருவரும் அற்புதமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தனர். இதில் பெத்தேல் 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் சதம் அடித்து அசத்தினார். அவர் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் என்ற ஸ்கோரை பதிவு செய்தது.

ரோகித் சர்மா சதம்

388 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

சுப்மன் கில் 84 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ஆதில் ரஷீத் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவருடன் விராட் கோலி 19 ரன்களுடன் ஆடி வருகிறார்.

31 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 186 ரன்கள் தேவைப்படுகின்றன. ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி களத்தில் இருப்பதால் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com