3வது டி20; அபிஷேக் சர்மா அரைசதம்...இந்திய அணி 223 ரன்கள் குவிப்பு

முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது.

3வது டி20; அபிஷேக் சர்மா அரைசதம்...இந்திய அணி 223 ரன்கள் குவிப்பு
Published on: 

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் அபிஷேக் சர்மா , இஷான் கிஷன் இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இஷான் கிஷன் 37 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து நிலைத்து விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்தார். திலக் வர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com