3-வது டி20; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
image courtesy; twitter/ @ICC
image courtesy; twitter/ @ICC
Published on

பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலி மற்றும் இந்தூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இந்தியா ; யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அவேஷ் கான்

ஆப்கானிஸ்தான்; ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா சத்ரான், கரீம் ஜனத், ஷரபுதீன் அஷ்ரப், கைஸ் அகமது, முகமது சலீம் சபி, பரீத் அகமது மாலிக்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com