3-வது டி20: நியூசிலாந்து அபார பந்துவீச்சு.. தென் ஆப்பிரிக்கா 136 ரன்கள் சேர்ப்பு

தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.
3-வது டி20: நியூசிலாந்து அபார பந்துவீச்சு.. தென் ஆப்பிரிக்கா 136 ரன்கள் சேர்ப்பு
Published on

ஆக்லாந்து,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையே இன்று 3-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே தடுமாறினர். யாரும் 30 ரன்களை கூட தாண்டவில்லை.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன், சாண்ட்னர், சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com