3வது டி20: வங்காளதேச அணிக்கு எதிராக ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
3வது டி20:  வங்காளதேச அணிக்கு எதிராக ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு
Published on

ஹராரே,

வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு | டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து நடந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், ஜிம்பாப்வே - வங்காளதேசம் இடையேயான 3வது. கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com