3வது டி20 - டேரில் மிட்செல் அதிரடி... இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இந்திய அணி
Published on: 

வெலிங்டன்,

3வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

இந்தியா - நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

3வது டி20

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள மைதானத்தில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

199 ரன்கள் இலக்கு

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com