

செஞ்சூரியன்,
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி 20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை முழுமையாக வெல்ல தென் ஆப்பிரிக்கா அணி முயற்சிக்கும். அதேவேளை ஆறுதல் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் தீவிரம் காட்டும்.