3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
Published on: 

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றன. இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற புள்ளி கணக்கில் சம நிலையில் உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. கேப் டவுன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com