இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; கேன் வில்லியம்சன் விலகல்

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ம் தேதி தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூரு மற்றும் புனேவில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது போட்டி நவம்பர் 1ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

முன்னதாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் , காயம் முழுமையாக குணமடையாததால் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com