4வது ஒரு நாள் போட்டி: கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் தவான் அரை சதம் அடித்தனர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் ஷிகார் தவான் அரை சதம் அடித்துள்ளனர்.
4வது ஒரு நாள் போட்டி: கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் தவான் அரை சதம் அடித்தனர்
Published on

ஜோகன்னெஸ்பர்க்,

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி ஜோகன்னெஸ்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் (5) ரன்களில் ரபடாவின் பந்து வீச்சில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடன் விளையாடிய ஷிகர் தவான் 18.2வது ஓவரில் அரை சதம் அடித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து தவானுடன் இணைந்து விளையாடிய கேப்டன் விராட் கோஹ்லி 21.2வது ஓவரில் அரை சதம் அடித்துள்ளார். இந்திய அணி 25 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தவான் (79) மற்றும் கோஹ்லி (60) ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com