

மவுன்டமாங்கானு,
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 4-வது ஒரு நாள் போட்டியில் இறங்குகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் மழை குறுக்கிட்ட போதிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு கிடைத்தது. அவ்விரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றது. ஹாமில்டனில் நடக்க இருந்த 3-வது ஆட்டம் இடைவிடாது பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று (வெள்ளிக்கி ழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.