4-வது டி20 போட்டி: இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

நாளைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
4-வது டி20 போட்டி: இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்
Published on: 

ஆக்லாந்து,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நாளை நடக்கிறது.

டி20 தொடர்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. எஞ்சிய இரு போட்டிகள் நடைபெற உள்ளன.

4-வது டி20 போட்டி

இந்த நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நாளை நடக்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியின் அதிரடியை நியூசிலாந்து அணி கட்டுப்படுத்தி வெற்றி பெறுமா? அல்லது 4வது டி20 போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இரு அணிகளும் டி20 போட்டியில் 34 முறை மோதியுள்ளன. இதில் 19-ல் இந்தியாவும், 12-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் சமனில் முடிந்தது. நாளைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com