4வது டி20 போட்டி; வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
image courtesy: @BCBtigers
image courtesy: @BCBtigers
Published on

டாக்கா,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 3 போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெறுகிறது. முதல் 3 போட்டிகளுக்கான வங்காளதேச அணியில் இடம் பெற்றாத முன்னணி வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் கடைசி இரு போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே அணி முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும், அதேவேளையில் வங்காளதேச அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com