4வது டி20 போட்டி; ஷகிப், முஸ்தாபிசுர் அபார பந்துவீச்சு...ஜிம்பாப்வேவை வீழ்த்திய வங்காளதேசம்

வங்காளதேசம் தரப்பில் ஷகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

டாக்கா,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடரில் 3-0 என வங்காளதேசம் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தன்சித் ஹசன் 52 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் லுக் ஜோங்வே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முடிவில் ஜிம்பாப்வே அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 138 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் திரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக ஜோனதான் கேம்பெல் 31 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ஷகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com