பெண்கள் டி20 உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுகள்... சப்னிம் இஸ்மாயில் வரலாற்று சாதனை

பெண்கள் டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

பெண்கள் டி20 உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுகள்... சப்னிம் இஸ்மாயில் வரலாற்று சாதனை
Published on

லண்டன்

பெண்கள் டி20 உலகக்கோப்பையில் 50 விக்கெட்டுகள் எடுத்து சப்னிம் இஸ்மாயில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்

இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி விளையாடியது.

இதில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான சப்னிம் இஸ்மாயில் 50 விக்கெட்டுகள் எடுத்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவருடைய 38-வது பெண்கள் டி20 உலகக்கோப்பை போட்டியில், தன்னுடைய ஓவரின் முதல் பந்து வீச்சிலேயே இங்கிலாந்து தொடக்க வீராங்கனையான ஆமி ஜோன்சை வீழ்த்தினார்.

முதல் இடம்

இதேபோட்டியில் மற்றொரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனால், அவருடைய மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது. இதனால், பெண்கள் டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

2-ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் (48 விக்கெட்டுகள்) உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டரான எலைஸ் பெர்ரி (44 விக்கெட்டுகள்) 3-வது இடம் பிடித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com