

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டம் மழையால் கைவி டப்பட்டது. மவுன்ட்மாங்கானுவில் நடந்த 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சேல் சான்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் இந்திய அணிக்காக அறிமுகமாக உள்ளார்.