

லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்டாலில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிகெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ளது.முதல் போட்டி மழையால் ர ரத்து செய்யப்பட்டது
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை முழுமையாக வெல்ல இங்கிலாந்து அணி முயற்சிக்கும். அதேவேளை இந்த போட்டியில் வென்று ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி முயற்சிக்கும்.