5வது டி20 போட்டி; இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்..!

இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.
image courtesy; twitter/ @ICC
image courtesy; twitter/ @ICC
Published on

பெங்களூரு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

அதேவேளையில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com