

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் இழந்தநிலையில், நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் களமிறங்கி உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் 133 ரன்களுக்கு ஆல் - அவுட்டானது. இதில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.
இந்த போட்டியில் 5-வது வரிசையில் களமிறங்கிய பாபர் அசாம், 18 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜோஷ் டாங்கின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி அவர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தொடர்ந்து 3-வது டெஸ்ட் இன்னிங்சிலும் பாபர் அசாம் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் விளையாடவில்லை. 2-வது டெஸ்டில் அணிக்கு திரும்பிய அவர், முதல் இன்னிங்சில் 8 ரன்களும், 2-வது இன்னிங்சில் 6 ரன்களும் மட்டுமே எடுத்தார். தற்போது 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் 7 ரன்களில் ஆட்டமிழந்துள்ளதால், அவரது பேட்டிங் பார்ம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
8, 6, 7 என தொடர்ந்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்திருப்பது பாபர் அசாம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே 0-2 என பின்தங்கியுள்ளது. அணிக்கு வெற்றி அவசியமான நிலையில், பாபர் அசாமின் மோசமான பேட்டிங் தொடர்வது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.