20 பந்துகள்... 9 ரன்கள்... 4 விக்கெட்டுகள் - ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய ஆர்ச்சர்

தி ஹண்ட்ரட் தொடரின் 16-வது லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் மோதின.
ஆர்ச்சர்
Published on

சென்னை,

தி ஹண்ட்ரட் தொடரில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் ஆபாரமாக பந்துவீசி ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார்.

தி ஹண்ட்ரட்

தி ஹண்ட்ரட் தொடரின் 16-வது லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரின் அசத்தலான பந்துவீச்சால் சதர்ன் பிரேவ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆர்ச்சர் வேகத்தில் சுருண்ட லண்டன் ஸ்பிரிட்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட் அணி, ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 103 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த அந்த அணி, அடுத்த 5 விக்கெட்டுகளை வெறும் 2 ரன்களுக்குள் பறிகொடுத்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ மட்டும் சிறப்பாக விளையாடி 56 ரன்கள் எடுத்தார்.

ஜோப்ரா ஆர்ச்சரின் மிரட்டல் ஸ்பெல்

இப்போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர், 20 பந்துகளை வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் வீசிய 20 பந்துகளில் 11 பந்துகள் டாட் பால்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே தி ஹண்ட்ரட் தொடரில் ஜோப்ரா ஆர்ச்சரின் மிகச்சிறந்த பந்துவீச்சாகும். பின்னர் 106 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய சதர்ன் பிரேவ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com