ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகள்... ரஞ்சி கோப்பையில் ஹர்ஷ் துபே அசத்தல்

விதர்பா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியுள்ளது.
ஹர்ஷ் துபே
Published on: 

நாக்பூர்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

தொடக்கத்திலேயே சரிந்த விக்கெட்டுகள்

நாக்பூரில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக யாஷ் துபே, சாக்சம் புரோஹித் களமிறங்கினர்.

யாஷ் துபே 5 ரன்கள் எடுத்திருந்தபோது நிக்கிகெட் புடே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஹர்ஷ் துபே தனது சுழற்பந்து வீச்சால் மத்திய பிரதேச அணியின் விக்கெட்டுகளைத் தொடர்ந்து வீழ்த்தினார்.

85 ரன்கள் எடுத்த அதர்வா மஹாஜன்

மத்திய பிரதேச அணியில் அதர்வா மஹாஜன் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 85 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர். இதனால் அந்த அணி 66.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

9 விக்கெட்டுகள்

விதர்பா அணியின் கேப்டன் ஹர்ஷ் துபே 23.1 ஓவர்கள் பந்துவீசி, 4 மெய்டன் ஓவர்களுடன் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மத்திய பிரதேச அணியின் முதல் விக்கெட்டை நிக்கிகெட் புடே வீழ்த்தினார். அந்த விக்கெட்டும் ஹர்ஷ் துபேவுக்குக் கிடைத்திருந்தால், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனையை அவர் படைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

இதையடுத்து விதர்பா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியுள்ளது.

X