20 ஆண்டு கால சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ஓய்வை அறிவித்த நியூசிலாந்தின் சூசி பேட்ஸ்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரே அவரது கடைசி சர்வதேச தொடராக இருக்கும்.
20 ஆண்டு கால சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ஓய்வை அறிவித்த நியூசிலாந்தின் சூசி பேட்ஸ்
Published on

வெல்லிங்டன்

மகளிர் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீராங்கனைகளில் ஒருவரான நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் (Suzie Bates), சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரே அவரது கடைசி சர்வதேச தொடராக இருக்கும்.

2003-ல் தனது 15-வது வயதில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமான சூசி பேட்ஸ், 2006-ம் ஆண்டு நியூசிலாந்து தேசிய அணிக்காக (White Ferns) அறிமுகமானார். சுமார் 20 ஆண்டுகளாக நியூசிலாந்து அணியின் தூணாகத் திகழ்ந்த அவர், பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

2011 முதல் ஏழு ஆண்டுகள் நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்த இவர் மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக திகழ்கிறார் (4717 ரன்கள்). ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார் (5964 ரன்கள்).

Also Read
டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிரடி மாற்றம் - பென் டக்கெட்டிற்கு பதிலாக ரெஹான் ஒப்பந்தம்
20 ஆண்டு கால சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ஓய்வை அறிவித்த நியூசிலாந்தின் சூசி பேட்ஸ்

சூசி பேட்ஸ் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, கூடைப்பந்து (Basketball) விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் நியூசிலாந்து நாட்டின் கூடைப்பந்து அணி சார்பாக அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தனது ஓய்வு குறித்துப் பேசிய சூசி பேட்ஸ், "20 ஆண்டுகள் இவ்வளவு சீக்கிரம் கடந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. நியூசிலாந்து சீருடையை அணிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இங்கிலாந்தில் மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பையை வென்று, வெற்றிகரமாக விடைபெறுவதே எனது இறுதி லட்சியம்," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com