டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிரடி மாற்றம் - பென் டக்கெட்டிற்கு பதிலாக ரெஹான் ஒப்பந்தம்

இங்கிலாந்தின் இளம் லெக்-ஸ்பின் ஆல்ரவுண்டர் ரேஹான் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிரடி மாற்றம் - பென் டக்கெட்டிற்கு பதிலாக ரெஹான் ஒப்பந்தம்
Published on

புது டெல்லி,

ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தனிப்பட்ட காரணங்களால் விலகியதை அடுத்து, அவருக்கு மாற்றாக இங்கிலாந்தின் இளம் லெக்-ஸ்பின் ஆல்ரவுண்டர் ரேஹான் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரெஹான் அகமது 75 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு டெல்லி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவே அவர் பங்கேற்கும் முதல் ஐபிஎல் தொடராகும். ஏற்கனவே அக்சர் படேல், குல்தீப் யாதவ் போன்ற முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ள டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சுத் துறைக்கு ரெஹானின் வருகை கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான பார்ம் காரணமாக தனது டெஸ்ட் வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்பி பென் டக்கெட் இந்தத் தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகினார்.

Also Read
வான்கடே மைதானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்.!
டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிரடி மாற்றம் - பென் டக்கெட்டிற்கு பதிலாக ரெஹான் ஒப்பந்தம்

21 வயதாகும் ரெஹான் 97 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.அண்மையில் நடந்த டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் மற்றும் அதிரடியான 19 ரன்கள் குவித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com