டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு கடினமான காலகட்டம் – மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது தனக்கு மிகுந்த சவாலாக இருந்ததாக அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு கடினமான காலகட்டம் – மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்
Published on: 

இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பிறகு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தைச் சந்தித்ததாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சிக்குப் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது தனக்கு மிகுந்த சவாலாக இருந்ததாக அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியவர் சூர்யகுமார் யாதவ். ஆனால், உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அவரது பேட்டிங் பார்ம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாட முடியாததால் இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார். இதனால் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனாக இருந்த அவர், அடுத்த சில மாதங்களிலேயே இந்திய அணியில் இடம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

பெண் குழந்தை

இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு தனக்கு மிகவும் கடினமாக இருந்தது, அந்த உண்மையை மறைக்க விரும்பவில்லை . வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நம்மிடம் நாமே நேர்மையாக இருக்க வேண்டும் . இந்திய அணியில் இடம் கிடைக்காதது மனதளவில் சவாலாக இருந்தாலும், அந்தச் சூழ்நிலையிலிருந்து மீண்டு வர முயற்சி செய்தேன்.

இதற்கிடையே, ஐபிஎல் தொடரின்போது தனக்கு பெண் குழந்தை பிறந்தது வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக சூர்யகுமார் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு தனது கவனம் முழுவதும் குடும்பத்தின் மீது திரும்பியதாகவும், கடந்த சில மாதங்கள் மிகவும் அழகான அனுபவமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.

X