ஈடர்ன் கார்டன் மைதானத்தில் ஒரு கேலரிக்கு ஜூலன் கோஸ்வாமி பெயர்

ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள ஒரு கேலரிக்கு ஜூலன் கோஸ்வாமி பெயரை வைக்க பெங்கால் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமி (வயது 41). இவர் இந்திய அணிக்காக 12 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.

இந்திய முன்னாள் வீராங்கனையான கோஸ்வாமியை கவுரவிக்கும் விதமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள ஒரு கேலரிக்கு அவரது பெயரை வைக்க பெங்கால் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந்தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 20 ஓவர் போட்டியின் போது கேலரிக்கு ஜூலன் கோஸ்வாமி பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com