35 வயதிலும் இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்: விராட் கோலி

35 வயதிலும் இதே போன்ற ஆட்டத்தை தொடர விரும்புகிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #ViratKohli
35 வயதிலும் இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்: விராட் கோலி
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்திலும் எளிதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினர்.

ஆட்ட நாயகன் விருதை பெற்ற விராட் கோலி, போட்டிக்கு பின்னர் பரிசளிப்பு விழாவில் பேசியதாவது:- இந்தப் போட்டியிலும் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பந்தில் நல்ல வேகமும், பவுன்சும் இருந்தது. 330 ரன்கள் வரை எடுக்கலாம் என நினைத்தோம். ஆனால், 30-வது ஓவருக்குப் பிறகு மாறிவிட்டது. அதனால், 280-290 ரன்கள் என இலக்கை மாற்றினோம்.

ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று ஆட வேண்டும். அப்போதுதான் ரன்களை குவிக்க முடியும். ஒரு கேப்டனாக கடைசி வரை நின்று பேட்டிங் செய்தது அற்புதமாக இருந்தது. ஒரு நாள் போட்டித் தொடரை இழந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறோம். நான், இந்த வருடம் 30 வயதை தொடப் போகிறேன். பிட்னஸ் சரியாக இருந்தால்தான் விளையாட்டை, வயதானாலும் தொடர முடியும்.

இதே போன்ற கிரிக்கெட்டை எனது 34-35 வயதில் கூட விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகக் கடும் பயிற்சி பெறுகிறேன். ஏனென்றால் நான் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆட விரும்புபவன். அந்த தீவிரம் போய்விட்டால், நான் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அந்த தீவிரத்தைப் பாதுகாக்கப் போராடுகிறேன். அதற்காக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பயிற்சி செய்கிறேன். அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் முக்கியம் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com