பந்துவீச்சு மாற்றத்திற்கு பின்னால் ‘மறைமுக நபர்’ - பெயர் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்த நிதிஷ்குமார்

தனது பந்துவீச்சு மாற்றத்திற்கு பின்னால் ஒரு ‘சிறப்பு நபர்’ இருப்பதாக நிதிஷ்குமார் கூறினார்.
பந்துவீச்சு மாற்றத்திற்கு பின்னால் ‘மறைமுக நபர்’ - பெயர் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்த நிதிஷ்குமார்
Published on

கொல்கத்தா,

ஐதராபாத் அணியின் நிதிஷ்குமார் ரெட்டி தனது அபார ஆல்-ரவுண்ட் திறமையால் கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், பேட்டிங்கில் 39 ரன்கள் எடுத்த அவர், பின்னர் பந்துவீச்சில் 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடந்த சீசனில் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிதிஷ், இந்த சீசனில் தனது பந்துவீச்சு முறையை மாற்றி எதிரணிக்கு சவாலாக மாறியுள்ளார். இந்த மாற்றத்திற்கு பின்னால் ஒரு ‘சிறப்பு நபர்’ இருப்பதாக அவர் கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read
தெற்காசிய கால்பந்து: 4-வது கோப்பை கனவு உடைந்தது…பெனால்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம்
பந்துவீச்சு மாற்றத்திற்கு பின்னால் ‘மறைமுக நபர்’ - பெயர் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்த நிதிஷ்குமார்

போட்டிக்குப் பிறகு பேசிய நிதிஷ், “நான் என் பந்துவீச்சில் தொடர்ந்து வேலை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு காயங்களால் பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு, ஒரு சிறப்பு நபரின் மேற்பார்வையில் ஒரு வாரம் பயிற்சி பெற்றேன். அவர் அளித்த ஆலோசனைகளை இப்போது மைதானத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறேன். ஆனால் அந்த நபர் யார் என்பதை இப்போது வெளிப்படுத்த மாட்டேன்; விரைவில் தெரிவிப்பேன்,” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com