

ஹராரே,
ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமைய ஆடம் ஜாம்பா பெற்றார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா. இவர் நேற்று ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆடம் ஜாம்பா பெற்றார். அவர் 123 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக, மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே 193 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 291 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வார்னே முதல் இடத்திலும் ஜாம்பா 2வது இடத்திலும் உள்ளனர்.
ஆனால், ஒட்டுமொத்த பட்டியலில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 238 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் வார்னே 3வது இடத்திலும், ஜாம்பா 7வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.