2வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
துபாய்,
ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துபாயில் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறக்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரசோலி அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அந்த அணியின் மேத்திவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.






