

புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடியது. நேற்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து, இந்திய அணிக்கு தொடரை வென்றதற்கான கோப்பை வழங்கப்பட்டது. வெற்றிக் கோப்பையை ஆப்கானிஸ்தான் கேப்டனுடன் சேர்ந்து ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரேயஸ் ஐயர், ஆப்கானிஸ்தான் கேப்டனான இப்ராஹிம் ஜத்ரானை வெற்றிக்கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு அழைத்தார். ஜத்ரானும், இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். இந்திய அணியின் இந்த செயல், போட்டி மனப்பான்மையை கடந்து ஒற்றுமையை உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியாக அமைந்தது.