

புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்திய அணிக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் முழு உடற்தகுதியை நிரூபித்துள்ளார். இதனால் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அவர் உடற்தகுதி சோதனையில் பங்கேற்க உள்ளார். அதன் முடிவை அடிப்படையாகக் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவக் குழு இறுதி முடிவை எடுக்கும். பும்ரா உடற்தகுதி பெற்றால் இந்திய அணிக்கு பலமாக அமையும்.