முதல் டி20: ஜிம்பாப்வேக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் டி20: ஜிம்பாப்வேக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
Published on: 

சார்ஜா,

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் டி20

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் 177 ரன்கள்

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 19.5 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அகமது ஹமிசாய் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே தரப்பில் அந்த அணியின் நியூமென் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கி விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com