இலங்கை ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான அந்த அணியில் 4 ரிசர்வ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு;-

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், கைஸ் அகமது, நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, நவீத் சத்ரன் மற்றும் பரித் அகமது மாலிக்.

ரிசர்வ் வீரர்கள்: ஷராபுதீன் அஷ்ரப், ஷாஹிதுல்லா கமல், அப்துல் ரஹ்மான் ரஹ்மானி மற்றும் பிலால் சாமி.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com