

லக்னோ,
இந்தியாவின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று லக்னோவில் நடந்தது. இப்போட்டில் அபிஷேக் சர்மா தனது டி20 சர்வதேச போட்டிகளில் முதல் ஓவரில் 13-வது சிக்ஸரை விளாசினார்.
இதன் மூலம் 12 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்த ரோஹித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இஷான் கிஷன் 8 சிக்ஸர்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 171 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 14.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.