

சென்னை,
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் கிழக்கு - தெற்கு மண்டல துலீப் கோப்பை இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், நேரில் பார்வையிட்டார்.
இந்த வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில், மூன்று நாட்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ.யின் முக்கியமான ஆய்வுக் கூட்டத்தில் அஜித் அகர்கர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது பதவி மற்றும் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்தன. அஜித் அகர்கர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் அளித்திருந்தார்.
அஜித் அகர்கரின் நேரடி கண்காணிப்பில் துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.