'இந்திய அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி'-ஆகாஷ் தீப்

கடினமான காலகட்டத்தில் அவர் அளித்த ஆதரவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
'இந்திய அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி'-ஆகாஷ் தீப்
Published on: 

இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் 2-வது நாள் ஆட்டத்துக்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் நிருபர்களிடம் பேசுகையில்,

'காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த காலக்கட்டத்தில் பயிற்சியாளர் கம்பீர் தொடர்ந்து என்னிடம் உடல்நிலை குறித்து விசாரிப்பார். கடினமான காலகட்டத்தில் அவர் அளித்த ஆதரவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்த போது உடல் தகுதியை மீட்டெடுப்பதுடன், பந்து வீச்சிலும் முன்னேற்றம் காண்பதில் கவனம் செலுத்தினேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது போன்ற உணர்வே ஏற்படவில்லை. எனது திறமையை மேலும் மேம்படுத்திக்கொள்ள விரும்பினேன்.

பொறுமையாக

இந்திய 'ஏ' அணிக்காக விளையாடிய போட்டிகளும் எனது நம் பிக்கையை அதிகரித்தன. இந்திய அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான பந்தை மட்டும் வீசவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. தொடர்ந்து சரியான இடங்களில் பந்து வீசி, திட்டமிட்டபடி செயல்படுவதில் தான் சுவனம் செலுத்தி னேன். கிளென் பிலிப்ஸ் விக்கெட்டுக்காக வீசிய பந்து எனது திட்டத்துக்கு ஏற்றவாறு அமைந்தது. ஆடுகளத்தின் தன்மையும், பந் தின் நிலையும் மாறிக்கொண்டே இருந்தன. புதிய பந்தில் பந்து வீசுவது சவாலாக இருந்தாலும், சரியான இடங்களில் பொறுமையாக பந்து வீசுவது முக்கியம். லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்கள் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் சேர்க்கும்போது எதிரணி பந்து வீச்சாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்' என்று தெரிவித்தார்.

X