கொல்கத்தா அணி வீரர் ஆன்ட்ரே ரசல் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்து சாதனை..!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆன்ட்ரே ரசல் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
கோப்புப் படம் ANI
கோப்புப் படம் ANI
Published on

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பையில் இன்று நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா தரப்பில் ஆன்ட்ரே ரசல் இறுதி ஓவரில் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு இன்னிங்சின் இறுதி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் மற்றும் டி20 போட்டியில் 20வது ஓவரில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரசல் படைத்தார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் இருவரும் கடைசி ஓவரில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com