அதனை தவிர்த்து மற்ற டி20 லீக் தொடர்களில் விளையாட எனக்கு விருப்பம் இல்லை - டிராவிஸ் ஹெட்


அதனை தவிர்த்து மற்ற டி20 லீக் தொடர்களில் விளையாட எனக்கு விருப்பம் இல்லை - டிராவிஸ் ஹெட்
x
தினத்தந்தி 29 Jan 2025 5:03 AM IST (Updated: 29 Jan 2025 5:03 AM IST)
t-max-icont-min-icon

டிராவிஸ் ஹெட், ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன டிராவிஸ் ஹெட், ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த வருடம் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவரை மெகா ஏலத்திற்கு முன் ரூ.14 கோடிக்கு ஐதராபாத் தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் அவர் சர்வதேச போட்டிகளை தவிர்த்து ஐ.பி.எல். தொடரில் மட்டுமே தான் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் சர்வதேச போட்டிகளை தவிர்த்து ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடுவேன். ஏனெனில் ஆஸ்திரேலியா மற்றும் ஐ.பி.எல். தொடர்களில் நான் விளையாடும்போது தேவையான ஓய்வு கிடைக்கிறது. எனது குடும்பமும் எனக்கு முக்கியம் என்பதனால் தேவையான நேரத்தில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். அதனாலேயே நான் ஆஸ்திரேலியா அணிக்காகவும், ஐ.பி.எல். தொடரிலும் மட்டுமே விளையாடுவேன். அதனை தவிர்த்து மற்ற டி20 லீக் தொடர்களில் விளையாட எனக்கு விருப்பம் இல்லை" என்று கூறினார்.

1 More update

Next Story