பும்ராவுக்கு கூடுதல் பலம்... மும்பை அணியை வலுப்படுத்தும் அர்ஷ்தீப் - இர்பான் பதான் கணிப்பு

ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கும் மாறியுள்ளனர்.
அர்ஷ்தீப் சிங்
Published on: 

மும்பை,

அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்திருப்பது அந்த அணியின் பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

ஹர்திக் - அர்ஷ்தீப்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான வீரர்கள் பரிமாற்றம் அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது. இதில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கும், பஞ்சாப் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை அணிக்கும் மாறியுள்ளனர்.

பும்ராவை சிறப்பாகப் பயன்படுத்தலாம்

இந்த வீரர்கள் பரிமாற்றம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், “அர்ஷ்தீப் சிங்கின் வருகை மும்பை இந்தியன்ஸ் அணியை மேலும் வலுப்படுத்தும். இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ராவை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களையும் சிறப்பாக பயன்படுத்த முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுவதிலும் அர்ஷ்தீப் திறமையானவர். ஏற்கெனவே பும்ரா, தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஷ்வானி குமார் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள மும்பை அணிக்கு அர்ஷ்தீப்பின் வருகை கூடுதல் பலமாக அமையும்.

கேப்டன் யார்?

இதற்கிடையே, ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ளதால் ஐபிஎல் 2027 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

X