ஆர்யவீர் சேவாக் 160 ரன்கள் விளாசல்... யு.ஏ.இ-க்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்திய வீரர் ஆர்யவீர் சேவாக் 160 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
ஆர்யவீர் சேவாக்
Published on: 

அல் அமராத்,

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யு.ஏ.இ-க்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர் ஆர்யவீர் சேவாக் 160 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்

8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் அயான் மிஷாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஆர்யவீர் சேவாக் அதிரடி சதம்!

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஆர்யவீர் சேவாக் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தார். அவருடன் இணைந்து விளையாடிய வி.கே. வினீத்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆர்யவீர் சேவாக் 168 பந்துகளில் 17 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 160 ரன்கள் விளாசினார். வி.கே. வினீத் 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த வீரர்களில் யஷ்பர்தன் சவுகான் 17 ரன்களும், அன்வய் திராவிட் 12 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது.

310 ரன்கள்

இதையடுத்து 310 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி விளையாட உள்ளது.

X