ஆஷஸ் கிரிக்கெட்: ஆண்டர்சன் விலகல்

ஆஷஸ் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆண்டர்சன் விலகி உள்ளார்.
ஆஷஸ் கிரிக்கெட்: ஆண்டர்சன் விலகல்
Published on

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டின் போது காயமடைந்தார். வெறும் 4 ஓவர் மட்டுமே பந்து வீசிய ஆண்டர்சன் வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறினார். அதைத் தொடர்ந்து அடுத்த இரு டெஸ்டுகளில் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில் காயம் முழுமையாக குணமடையாததால் ஆஷஸ் தொடரின் எஞ்சிய இரு டெஸ்டுகளில் இருந்தும் 37 வயதான ஆண்டர்சன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கிரேக் ஓவர்டான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com