ஆஷஸ் தொடர் அட்டவணை அறிவிப்பு

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆஷஸ் தொடர் அட்டவணை அறிவிப்பு
Published on

லண்டன்,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, முதல் போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த ஆண்டு ஜூன் 18 முதல் 22 வரை நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் மோதுகின்றன.

இரண்டாவது டெஸ்ட் ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை லார்ட்ஸ் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 8 முதல் 12 வரையும், நான்காவது டெஸ்ட் ஜூலை 21 முதல் 25 வரை சவுத்தாம்ப்டனிலும், கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை தி ஓவல் மைதானத்தி லும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com