

சென்னை,
ஆசியக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியில் ஷர்மின் சுல்தானா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காளதேச கிரிக்கெட் வாரியம் 15 வீராங்கனைகள் கொண்ட அணியை அறிவித்தது. கடந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த தாஜ் நெஹருக்குப் பதிலாக ஷர்மின் சுல்தானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீராங்கனைகளில் கூடுதல் அனுபவம் தேவைப்பட்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
வங்காளதேச அணி ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தோனேசியாவுக்கு எதிராக ஆசியக் கோப்பை போட்டியை தொடங்குகிறது. அதன்பின் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.
ஆசியக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வங்காளதேச மகளிர் அணி:
நிகர் சுல்தானா ஜோட்டி (கேப்டன்), நஹிதா அக்டர் (துணை கேப்டன்), திலாரா அக்டர், ஜுவைரியா பெர்டஸ், ஷர்மின் அக்தர் சுப்தா, ஷர்மின் சுல்தானா, சோபானா மோஸ்டரி, ஷோர்னா அக்டர், ரிது மோனி, பஹிமா காதுன், ரபேயா கான், ரபேயா கான், மரூப்யா கான். ஃபரிஹா இஸ்லாம் திரிஸ்னா.