ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியுடன் இந்திய ‘ஏ’ அணி வெளியேற்றம்

முந்தைய ஆட்டத்தில் 28 பந்தில் சதம் விளாசிய சூர்யவன்ஷி இந்த முறை நிதானத்தை கடைபிடித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியுடன் இந்திய ‘ஏ’ அணி வெளியேற்றம்
Published on: 

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் இந்தியா ஏ-இலங்கை ஏ அணிகள் சந்தித்தன.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷியும், அபிஷேக் ஷர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முந்தைய ஆட்டத்தில் 28 பந்தில் சதம் விளாசிய சூர்யவன்ஷி இந்த முறை நிதானத்தை கடைபிடித்தார். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்த சூர்யவன்ஷி 40 ரன்களில் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஜனித் லியானகே வீசிய ஷாட்பிட்ச் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 78 ரன்கள் (63 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். இந்திய அணி 30.3 ஓவர் களில் 200-ஐ தொட்ட விதத்தை பார்த்த போது ஸ்கோர் 350-ஐ தாண்டும் போல் தோன்றியது. ஆனால் மிடில் வரிசையில் குமார் குஷக்ரா (21 ரன்), கேப்டன் திலக் வர்மா (53 ரன்), ரிங்கு சிங் (12 ரன்) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெ ளியில் சுழல் தாக்குதலில் சிக்கியதும் ரன்ரேட் வெகுவாக குறைந்தது.

இந்திய ஏ அணி

எப்படியோ கடைசி கட்டத்தில் ஷபாஸ் அகமது (54 ரன்), அறிமுக வீரர் தனுஷ் கோடியன் (28 ரன்) அணியின் ஸ்கோர் 300-ஐ கடக்க வழிவகுத்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி 8 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிந்து பெர்னாண்டோ, நிபுன் தனஞ்ஜெயா, வேகப்பந்து வீச்சாளர் ஜனித் லியானகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் 318 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் லசித் குரூஸ்புல்லேவும். சினேத் ஜெயவர்த்தனேவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் திரட்டி வெற்றிப்பாதையை சுலபமாக்கினர். ஜெயவர்த்தனே 105 ரன்களி லும் (70 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்), குரூஸ்புல்லே 116 ரன்களிலும் (107 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

இலங்கை வெற்றி

இலங்கை ஏ அணி 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள்கால்பதித்தது. இந்திய அணி வெளியேறியது. நிஷான் மதுஷ்கா 58 ரன்னுடனும், கேப்டன் பவன் ரத்னாயகே 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இதே மைதானத்தில் இன்று நடக்கும் 2-வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் ஏ- வங்காளதேசம் ஏ அணிகள் மோதுகின்றன.

X