ஆசிய கோப்பை கிரிக்கெட்: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
image courtesy; @ICC
image courtesy; @ICC
Published on

காபூல்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படிஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரான், டார்விஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பைதின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசன்பர், நூர் அகமது, பரீத் மாலிக், நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி.

X

Daily Thanthi
www.dailythanthi.com