ஆசிய கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: இலங்கை அணி வெற்றி பெற 318 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

ஷாபாஸ் அகமது (54) அரை சதம் விளாசினார். அவரும், ஹர்ஷ் துபேவும் (8) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இடது: திலக் வர்மா, வலது: ஷாபாஸ் அகமது
இடது: திலக் வர்மா, வலது: ஷாபாஸ் அகமது
Published on: 

தோகா

ஆசிய கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற 318 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

கத்தார் தலைநகர் தோகாவில், வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா 'ஏ'- இலங்கை "ஏ' அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இந்திய 'ஏ' அணி தனது முதலாவது லீக்கில் 306 ரன் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தியது.

2-வது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. கடைசி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வெற்றி கொண்டது. இந்த நிலையில், இன்று தொடங்கிய முதலாவது அரைஇறுதி போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அபிஷேக் சர்மா அபாரம்

தொடக்க ஆட்டக்காரர்களில் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம்போல், அதிரடியாக விளையாடினார். அவர் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடித்திருந்தபோது (40 ரன்கள்), லியானகே பந்து வீச்சில் குரூஸ்புல்லேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன், கேப்டன் திலக் வர்மா ஜோடி போட்டார். இதில், அபிஷேக் சர்மா அரை சதம் அடித்ததுடன், 78 ரன்கள் (11 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்திருந்தபோது, சமரகூன் பந்து வீச்சில் லியானகேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

திலக் வர்மா, ஷாபாஸ் அகமது அரை சதம்

திலக் வர்மா 53 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். குமார் குஷாக்ரா (21), ரிங்கு சிங் (12), சூர்யான்ஷ் ஷெட்கே (10), தனுஷ் கோடியான் (28) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது (54) அரை சதம் விளாசினார். அவரும், ஹர்ஷ் துபேவும் (8) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

318 ரன்கள் இலக்கு

50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 317 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இலங்கை அணி வெற்றி பெற 318 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

X