

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இலங்கை 'ஏ' (6 புள்ளி), வங்காளதேசம் 'ஏ' (4 புள்ளி), பாகிஸ்தான் 'ஏ' (6 புள்ளி). இந்தியா 'ஏ' (4 புள்ளி) தங்கள் பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. ஆப்கானிஸ்தான் 'ஏ' (2 புள்ளி), ஹாங்காங் (0), நேபாளம் (2 புள்ளி), ஐக்கிய அரபு அமீகரம் (0) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா 'ஏ'- இலங்கை "ஏ' அணிகள் மோதுகின்றன.
இந்திய 'ஏ' அணி தனது முதலாவது லீக்கில் 306 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ஊதித்தள்ளியது. 2-வது ஆட்டத் தில் 48 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் போராடி பணிந்தது. கடைசி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக் கிய அரபு அமீரகத்தை துவம்சம் செய்தது.
இந்திய அணியில் பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா. கேப்டன் திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங், குமார் குஷக்ரா, சூர்யான்ஷ் ஷெட்கே, ஷபாஸ் அகமது என பெரிய பட்டாளமே இருக்கிறது. முதல் ' இரு ஆட்டங்களில் தடுமாறிய சூர்யவன்ஷி அமீரத்துக்கு எதிரான ஆட்டத்தில் 204 ரன்கள் (53 பந்து, 7 பவுண்டரி, 28 சிக்சர்) குவித்து வியக்க வைத்தார். அதிரடியில் மிரட்டிய அவர் 28 பந்துகளில் சதத்தையும், 52 பந்துகளில் இரட்டை சகத்தையும் எட்டி உலக சாதனை படைத்தார். அவரது ரன்வேட்டை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பந்து வீச்சில் பிரின்ஸ் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷத் கான் வலுசேர்க்கின்றனர்.
இலங்கை 'ஏ' அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும். 24 ரன் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும். 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் வரிசையாக தோற்கடித்தது.
அந்த அணியில் பேட்டிங்கில் நிஷான் மதுஷ்கா, லசித் குரூஸ்புல்லே. கேப்டன் பவன் ரத்னாயகேவும், பந்து வீச்சில் வனுஜா சஹான், ரவிந்து பெர்னாண்டோ. துலாஜ் சமுதிதாவும் நல்ல நிலையில் உள்ளனர்.